Tuesday, 26 April 2016

நீ செத்துவிடச் சம்மதம் எனக்கு... (21.06.2013)



உன் கர்வங்களில் மோதி மோதியே 
கட்டெரும்பாய் தேய்ந்து போன கழுதை 
என் காதல் 

உன் கர்வங்கள் ஊர்ந்து ஊர்ந்தே 
துரும்பாய் தேய்ந்து போன இரும்பு 
என் காதல் 

வளர வளர வெட்டுகிற கூறிய ஆயுதம் 
உன் கர்வங்கள் 
வெட்டப்பட்ட துண்டுகள் 
இருபுறமும் வளர்கிற மண் புழுவாய்
என் காதல் 

நீ வெட்டிக்கொண்டே இரு 
வளர்ந்துகொண்டே இருக்கட்டும் 
என் காதல் 

தங்கத்தின் விலை போல 
உயர்ந்து கொண்டே போகும் உன் கர்வங்கள் 
ஏக்கத்தோடு நகைக்கடையை பார்த்தபடியே 
நகந்து செல்லும் ஏழை சிறுமியாய்
என் காதல் 

வாங்கிவந்த பரிசு பொருளை 
தரமறுத்து ஒளித்து வைப்பது போல
எனக்கான உன் காதலை 
கர்வங்களில் மூடி மறைக்கிறாய் 

பூக்களை தண்டிக்க பீரங்கி ஏந்துவது போல் 
என் காதலை தண்டிக்க கர்வங்களை ஏந்தும் 
கோழை  நீ 

உண்மையில் உன் கர்வங்கள் அஞ்சுகின்றன 
என் காதலைப் பார்த்து 

என் தரப்பிலும் தவறுகள் இருக்கக் கூடும் 
திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடு 
பாவம் காதலை வாழவிடு 

தோல்வியில் நான் துவழும்போது ஆறுதலாய் 
துரோகத்தில் நான் துடிக்கும்போது தேற்றுதலாய் 
உன்னையன்றி வேறு யார் இருக்க முடியும்?

நிச்சயமாய் மறுப்பதற்கில்லை 
நீ ஒரு உந்துசக்தி 

எனக்கான சாட்டை நீ  
எனக்கான கடிவாளம் நீ 
என் மாணவியும் நீ 
என் ஆசானும் நீ 

தங்கமே நீ தனித்துவமானவள் 
உன் சுயம் உணர்ந்தவளாய் இரு 

நான் குழந்தையாகையில் 
தாயாய் இரு 
குறைவின்றி  அன்புசெலுத்த 
தயாராய் இரு 

புன்னகை தொலைத்த முகங்கள் 
அழகாய் இருப்பதில்லை 
நீ எப்போதும் அழகாய் இரு 

கொடுப்பது கண்டு அழுக்காராதே 
கொடுக்கும் நிலையில்
நாம் இருப்பது கண்டு அகமகிழ்ந்து இரு 

உன் கனவுகளுக்காக எந்நாளும் 
உழைக்கச் சம்மதம் எனக்கு 
உன் வேதனைகள் என் தோளில் 
சுமக்கச் சம்மதம் எனக்கு 

உன்னை கௌரவமாய் பாதுகாப்பாய் 
வைக்கச் சம்மதம் எனக்கு 
உன் எதிர்காலத் தேவைகளும் 
கொடுக்கச் சம்மதம் எனக்கு 

உன் கர்வங்கள் தரும் வலிகள் 
சகிக்கச்  சம்மதம் எனக்கு 
சில நேரம் எனை மறந்து 
அழுதிடச் சம்மதம் எனக்கு 

இன்னும் என் காதல் 
உனக்கு புரியாதென்றால் 

நீ செத்துவிடச் சம்மதம் எனக்கு...

No comments:

Post a Comment