உனைப் பேயென விரட்டும்
பொறாமைச் சமூகம்
உன் சந்தோஷம் கெடுக்கும்
சுயநலச் சமூகம்
குறுகுறுக்கும் நெஞ்சோடு
உன்னைக் கூர்ந்து பார்க்கும்
பாவ மூட்டைப் பட்டியலை
உனக்கு முன்னால் விரிக்கும்
உன் பலவீனங்கள் தேர்ந்தெடுத்து
பலமாய் ஈட்டி பாய்ச்சும்
பின்னால் நீ போனால்
ஏளனமாய் சிரிக்கும்
முன்னால் நீ போனால்
முதுகில் குத்தப்பார்க்கும்
உன் பாதையின் குறுக்கே
பள்ளம் பறிக்கும்
அதனுள் சுயநல
வெள்ளம் நிறைக்கும்
உன்னை அழச்செய்யும்
துரோகத்தில் துவண்டு
விழச்செய்யும்
நிமிரும்போது தலையில் தட்டும்
கால்களைப் பிணைத்து கயிறு கட்டும்
வளர்வாய் நீ என்று கிலி கொள்ளும்
ஊரெல்லாம் எனைக் குறித்து பழிசொல்லும்
சோர்ந்து நிற்கையில்
சொல்லெரிந்து போகும்
களைத்து நிற்கையில்
கல்லெறிந்து போகும்
இன்னும் எறியச்சொல்
உன்னில் எறிந்த கற்கள்
உன் படிக்கட்டில் பயன்படட்டும்
படிக்கட்டின் உயரம்
வானம் தொடட்டும்
உன் பிள்ளைகள் உன் வாழ்வில்
பாடம் பெறட்டும்
செருக்குகள் கண்டுசினம் கொண்டிடு
புறப்பேச்சுக்கள் கண்டு பதராதிரு
ஆணவம் கண்டு அடங்கிட மறு
ஆயிரம் வரினும் சுயத்தொடிரு
உனக்கான கேள்விக்கு நீயே தான் விடை
துணிந்து நீ எழுந்திடு உனக்கேது தடை ...
பொறாமைச் சமூகம்
உன் சந்தோஷம் கெடுக்கும்
சுயநலச் சமூகம்
குறுகுறுக்கும் நெஞ்சோடு
உன்னைக் கூர்ந்து பார்க்கும்
பாவ மூட்டைப் பட்டியலை
உனக்கு முன்னால் விரிக்கும்
உன் பலவீனங்கள் தேர்ந்தெடுத்து
பலமாய் ஈட்டி பாய்ச்சும்
பின்னால் நீ போனால்
ஏளனமாய் சிரிக்கும்
முன்னால் நீ போனால்
முதுகில் குத்தப்பார்க்கும்
உன் பாதையின் குறுக்கே
பள்ளம் பறிக்கும்
அதனுள் சுயநல
வெள்ளம் நிறைக்கும்
உன்னை அழச்செய்யும்
துரோகத்தில் துவண்டு
விழச்செய்யும்
நிமிரும்போது தலையில் தட்டும்
கால்களைப் பிணைத்து கயிறு கட்டும்
வளர்வாய் நீ என்று கிலி கொள்ளும்
ஊரெல்லாம் எனைக் குறித்து பழிசொல்லும்
சோர்ந்து நிற்கையில்
சொல்லெரிந்து போகும்
களைத்து நிற்கையில்
கல்லெறிந்து போகும்
இன்னும் எறியச்சொல்
உன்னில் எறிந்த கற்கள்
உன் படிக்கட்டில் பயன்படட்டும்
படிக்கட்டின் உயரம்
வானம் தொடட்டும்
உன் பிள்ளைகள் உன் வாழ்வில்
பாடம் பெறட்டும்
செருக்குகள் கண்டுசினம் கொண்டிடு
புறப்பேச்சுக்கள் கண்டு பதராதிரு
ஆணவம் கண்டு அடங்கிட மறு
ஆயிரம் வரினும் சுயத்தொடிரு
உனக்கான கேள்விக்கு நீயே தான் விடை
துணிந்து நீ எழுந்திடு உனக்கேது தடை ...
No comments:
Post a Comment