தூங்கிப்போன தோழி - இப்போ
விடிஞ்சாச்சு எந்திரி
அடங்கி ஒடுங்கி வாழ்ந்த வாழ்க்கை
போதுமடி சுந்தரி
அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்க
இன்னும் என்ன பயமடி
சுயமரியாதை செத்தபின்னே
வாழ்வதென்ன வாய்வழி
சொரனை இன்னும் சாகவில்லை
மிச்சமிருக்கு பாரடி
காட்டு விலங்கு பயந்தோடும் -நீ
பறையடிக்கும் சத்தத்தில்
நாட்டு விலங்கைக் கண்டு நீயும்
நடுங்கலாமா அச்சத்தில்
ஈனசாதி உடம்பென்று
உன்னை நெருங்கும் நாய்களை
'அந்த ' இடத்தில் எத்தடி - உன்
செருப்பைக் கழற்றி மொத்தடி
பல்ல காட்டி வழிபவனை
காரி முகத்தில் துப்படி
ஆம்பிள்ளைன்னா என்ன
ரெண்டு கொம்பான்னு கேளடி
காலில் பிறந்த சூத்திரச்சின்னு
கேவலமா பேசினால்
முப்பரிய அத்தெறி -அவன்
ஜாதி வெறிய கத்தறி
காரல் மார்க்சு கற்றுத்தந்த
சித்தாந்த பலமடி
வீரம், தியாகம், மனிதநேயம்
மூன்றும் கலந்த நிறமடி
நீ செங்கொடியை ஏந்தடி
புதிய உலகு படைப்பதற்கு
போராட்டமே தீர்வடி
No comments:
Post a Comment