அது மழைபெய்து ஓய்ந்த
ஒரு மாலைநேரம்...
அந்த கீற்றுக்கொட்டகையின்
ஒழுகாத ஒரு மூலையில்
கிழிந்த கந்தலுடுத்திய
தாயை அணைத்தபடி
ஒரு அம்மணமான
மூன்று வயதுக் குழந்தை
விரல் சப்பியபடி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
மேலிருந்து நீர் ஒழுகும்
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு பாத்திரங்கள்
வைக்கப்பட்டிருக்கின்றன
கொடுக்கிற தெய்வம்
கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கிறது
ஒவ்வொரு மழைக் காலத்திலும்.
சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள்
பாத்திரத்தில் விழுந்து தெறிக்கும்
'தளக் தளக்' சப்தம்
தாள கதியில்
கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஒடுங்கியிருந்த - ஒரு
உலோக கிண்ணத்தில்
பாதியளவு நிரப்பப்பட்ட
பாலில்லாத கட்டங்காப்பியில்
ஆவி பறந்துகொண்டிருந்தது
பசியில் துவண்டுபோயிருந்த
ஐந்துவயதுச் சிறுமி ஒருத்தி
பனையோலை விசிறிகொண்டு
கட்டங்காப்பியைச்
சூடாற்றிக்கொண்டு இருக்கிறாள்.
அழுக்கடைந்த அவள் சட்டையில்
அறுந்திருந்த பொத்தான்களுக்கு பதில்
பின்னூசிகள் கோர்க்கப்பட்டிருந்தன
கிண்ணத்துக்கு அருகே - நான்கு
பழுப்பேறிய பித்தளைக் கிளாசுகள்
சதுரங்கச் சிப்பாய்கள் போல
வரிசையாக நிற்கின்றன
"சீக்கிரம் ஊத்துமா பசிக்குது "
எண்ணை காட்டப்படாத
தலையுடன் கூடிய
ஏழு வயதுச் சிறுவன்
அவசரம் காட்டுகிறான்.
ஐந்துமுறை ஒட்டுப்போட்டும்
ஆறாவது முறையாய்க் கிழிந்துபோன
அரைக்கால் டிரவுசரின்
'தபால் பெட்டி' யைக் கேலிசெய்த
அடுத்த வீட்டுச் சிறுவன் மீதிருந்த
கோபமும் காரணமாய் இருக்கலாம்.
கண்ணீர் வற்றிப்போன கண்களுடனும்
அழுது வீங்கியிருந்த கன்னங்களுடனும்
கிண்ணத்திலிருந்த கட்டங்காப்பியை
கிளாசுகளில் ஊற்றுகிறாள்
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
பட்டிக்காட்டுத் தாய்...
கட்டியவன் கைவிட்டுப்போய்
வருஷம் ஒண்ணாச்சு
மூணுவேளை வயிறுகுளிர்ந்து
மாசக்கணக்காச்சு
ஒருவேளைக்கும் வழியற்றுப்போய்
வாரக்கணக்காச்சு.
பிள்ளைகள் மூவருக்கும் கொடுத்துவிட்டு - எப்போதும்
பட்டினியாய் உறங்கச்செல்லும் அவள்
இன்று மட்டும் ஏனோ
நான்காவது பங்கை
தனது கிளாசில் ஊற்றுகிறாள்
மூன்றுவயதுக் குழந்தை
தாய் முகம் கண்டு சிரிக்கிறது
குடிப்பதற்கு ஏதோ
கிடைக்கப்போகிற மகிழ்ச்சியில்...
அவசரமாய் குடிக்கச்சென்ற மகளிடம்
"இரு... நான் சொல்லும்போது தான்
எல்லாரும் ஒண்ணா குடிக்கணும்"
என்று தடுக்கிறாள் தாய்.
’மூன்று வயதுக் குழந்தைக்கு
ஊட்டிவிட்டு குடிப்பதா? -இல்லை
நான் குடித்துவிட்டு அவனுக்கு ஊட்டுவதா? ’
விசும்பியபடியே குழம்புகிறாள் தாய்...
"அம்மா..., நாளைக்கு எனக்குக்
கஞ்சி வேண்டாம்மா ,
இப்போ முழு கிளாஸ் ஊத்துங்கம்மா
ரொம்ப பசிக்குது, "
தவிப்புடன் கேட்கிறான்
'தபால் பெட்டி' சிறுவன்.
அதுவரை அடக்கியிருந்த
ஒட்டுமொத்த துக்கமும்
அந்த நொடியில் வெடித்துக்கிளம்ப
எல்லா கிளாசுகளையும் தட்டிவிட்டு
மூன்று பிள்ளைகளையும்
கட்டிக்கொண்டு அழுகிறாள் தாய்.
ஏனென்று புரியாமல்
மூன்றுவயதுக் குழந்தை அழ
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்
சிறுமியும் அழ
காரணம் புரியாமல்
சிறுவனும் அழ...
அந்த மூன்றுவயது குழந்தை
இந்தக் கதையை
முப்பத்திமூன்று வருடம் கடந்து
எழுதும்போதும்
மௌனமாய் ஏனோ அழுகிறது....
மூட்டைப்பூச்சி மருந்தின் நெடி
இன்னும் எனக்குள்
வீசிக்கொண்டே இருக்கிறது...
அது மழைபெய்து ஓய்ந்த
ஒரு மாலைநேரம்...
ஒரு மாலைநேரம்...
அந்த கீற்றுக்கொட்டகையின்
ஒழுகாத ஒரு மூலையில்
கிழிந்த கந்தலுடுத்திய
தாயை அணைத்தபடி
ஒரு அம்மணமான
மூன்று வயதுக் குழந்தை
விரல் சப்பியபடி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
மேலிருந்து நீர் ஒழுகும்
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு பாத்திரங்கள்
வைக்கப்பட்டிருக்கின்றன
கொடுக்கிற தெய்வம்
கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கிறது
ஒவ்வொரு மழைக் காலத்திலும்.
சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள்
பாத்திரத்தில் விழுந்து தெறிக்கும்
'தளக் தளக்' சப்தம்
தாள கதியில்
கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஒடுங்கியிருந்த - ஒரு
உலோக கிண்ணத்தில்
பாதியளவு நிரப்பப்பட்ட
பாலில்லாத கட்டங்காப்பியில்
ஆவி பறந்துகொண்டிருந்தது
உலோக கிண்ணத்தில்
பாதியளவு நிரப்பப்பட்ட
பாலில்லாத கட்டங்காப்பியில்
ஆவி பறந்துகொண்டிருந்தது
பசியில் துவண்டுபோயிருந்த
ஐந்துவயதுச் சிறுமி ஒருத்தி
பனையோலை விசிறிகொண்டு
கட்டங்காப்பியைச்
சூடாற்றிக்கொண்டு இருக்கிறாள்.
அழுக்கடைந்த அவள் சட்டையில்
அறுந்திருந்த பொத்தான்களுக்கு பதில்
பின்னூசிகள் கோர்க்கப்பட்டிருந்தன
கிண்ணத்துக்கு அருகே - நான்கு
பழுப்பேறிய பித்தளைக் கிளாசுகள்
சதுரங்கச் சிப்பாய்கள் போல
வரிசையாக நிற்கின்றன
"சீக்கிரம் ஊத்துமா பசிக்குது "
எண்ணை காட்டப்படாத
தலையுடன் கூடிய
ஏழு வயதுச் சிறுவன்
அவசரம் காட்டுகிறான்.
ஐந்துமுறை ஒட்டுப்போட்டும்
ஆறாவது முறையாய்க் கிழிந்துபோன
அரைக்கால் டிரவுசரின்
'தபால் பெட்டி' யைக் கேலிசெய்த
அடுத்த வீட்டுச் சிறுவன் மீதிருந்த
கோபமும் காரணமாய் இருக்கலாம்.
கண்ணீர் வற்றிப்போன கண்களுடனும்
அழுது வீங்கியிருந்த கன்னங்களுடனும்
கிண்ணத்திலிருந்த கட்டங்காப்பியை
கிளாசுகளில் ஊற்றுகிறாள்
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
பட்டிக்காட்டுத் தாய்...
கட்டியவன் கைவிட்டுப்போய்
வருஷம் ஒண்ணாச்சு
மூணுவேளை வயிறுகுளிர்ந்து
மாசக்கணக்காச்சு
ஒருவேளைக்கும் வழியற்றுப்போய்
வாரக்கணக்காச்சு.
பிள்ளைகள் மூவருக்கும் கொடுத்துவிட்டு - எப்போதும்
பட்டினியாய் உறங்கச்செல்லும் அவள்
இன்று மட்டும் ஏனோ
நான்காவது பங்கை
தனது கிளாசில் ஊற்றுகிறாள்
மூன்றுவயதுக் குழந்தை
தாய் முகம் கண்டு சிரிக்கிறது
குடிப்பதற்கு ஏதோ
கிடைக்கப்போகிற மகிழ்ச்சியில்...
அவசரமாய் குடிக்கச்சென்ற மகளிடம்
"இரு... நான் சொல்லும்போது தான்
எல்லாரும் ஒண்ணா குடிக்கணும்"
என்று தடுக்கிறாள் தாய்.
’மூன்று வயதுக் குழந்தைக்கு
ஊட்டிவிட்டு குடிப்பதா? -இல்லை
நான் குடித்துவிட்டு அவனுக்கு ஊட்டுவதா? ’
விசும்பியபடியே குழம்புகிறாள் தாய்...
"அம்மா..., நாளைக்கு எனக்குக்
கஞ்சி வேண்டாம்மா ,
இப்போ முழு கிளாஸ் ஊத்துங்கம்மா
ரொம்ப பசிக்குது, "
தவிப்புடன் கேட்கிறான்
'தபால் பெட்டி' சிறுவன்.
அதுவரை அடக்கியிருந்த
ஒட்டுமொத்த துக்கமும்
அந்த நொடியில் வெடித்துக்கிளம்ப
எல்லா கிளாசுகளையும் தட்டிவிட்டு
மூன்று பிள்ளைகளையும்
கட்டிக்கொண்டு அழுகிறாள் தாய்.
ஏனென்று புரியாமல்
மூன்றுவயதுக் குழந்தை அழ
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்
சிறுமியும் அழ
காரணம் புரியாமல்
சிறுவனும் அழ...
அந்த மூன்றுவயது குழந்தை
இந்தக் கதையை
முப்பத்திமூன்று வருடம் கடந்து
எழுதும்போதும்
மௌனமாய் ஏனோ அழுகிறது....
மூட்டைப்பூச்சி மருந்தின் நெடி
இன்னும் எனக்குள்
வீசிக்கொண்டே இருக்கிறது...
இன்னும் எனக்குள்
வீசிக்கொண்டே இருக்கிறது...
No comments:
Post a Comment