முதலில் விமர்சனம் என்ற சொல்லாடலே இந்த நூலைப்பொருத்தவரை சரியான தேர்வாக இருக்காது. பரிந்துரை என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
” ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகம் சொல்லத் தயங்கி நிற்கும் பொருளை அந்த சமூகத்தை நோக்கி சமூகத்தின் சார்பாக பேசவேண்டும்” என்பார் தமுஎகச தோழர் தமிழ்செல்வன். (வார்தைகள் மாறியிருக்கலாம்.)
அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக அந்த மக்களின் சார்பாக பேசாத எந்தஒரு கலையோ இலக்கியமோ வெரும் ’காகிதக்குப்பைகள்’ என்பதைத்தாண்டி அவற்றை ஒரு படைப்பாகவே கருதுவதற்கில்லை. தோழர் திருப்பூர் குணாவின் இந்த புத்தகம் சாதிக்கட்சித் தலைமையால் ஏமற்றப்பட்ட, இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி அவர்களின்பால் ஆழ்ந்த அக்கரையுடன் பேசுகிறது. பாப்கார்ன் தலைமுறை இளைஞர்கள் பெரிதும் மதித்து சிலாகிக்கும் சில ’பாதுகாக்கப்பட்ட’ அறிவுஜீவிகளின் முகத்திறையைக் கிழிக்கிறது.
சாதிய மத இன மொழி அடையாள அரசியல்செய்து பிழைக்கும் ஈனக்கட்சிகளும், மார்க்சியத்துக்கு மாற்றான அரசியலைக் கண்டறிந்து(!?) உலகுக்கு கூறிய பின்னவீனத்துவ தரகு கும்பலும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் எச்சைப் பொறுக்கிகள் என்பதை ஆணித்தரமாக அம்பலப்படுத்துகிறது இந்த நூல். இந்த கூட்டிக்கொடுக்கும் கூட்டத்தைச் சாடுவதோடு ”…சாதிய வெறியாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் தேவைப்பட்டால் சாதிவெறியர்களை அழித்தொழிக்கவும், அதனால் தங்களது உயிரைக் கூட விடவும் துணியும் புரட்சிகர இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்களாகும்.” என்ற வழிகாட்டுதலையும் கொடுத்திருக்கிறார் தோழர் குணா.
“அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற பிழைப்புவாதிகளே தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டமும்,அர்ப்பனிப்பும்,தியாகமும் மருக்க முடியாதது. இன்று சாதிவெறியை பிழைப்பாக கொண்டுள்ள இராமதாசு கூட நானும் நக்சலைட்டுதான் என்று கூறுமளவுக்கு கம்யூனிஸ்டுகள் புரட்சிகரப் பாத்திரமாற்றினர். கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்த்து விட்டவர்கள் கூட கம்யூனிசத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்தான் இருந்தனர். ஆளும் வர்க்கத்துக்கு இருந்த அந்தக் குறையை நிவர்த்தி செய்து தந்தவர்கள் பின்நவீனத்துவவாதிகள். ” பின்நவீனத்துவ வாதிகளின் நோக்கத்தை இதைவிட யாரும் எளிமையாக கூறிவிட முடியாது என்றே தோன்றுகிறது. இவர்களின் சூழ்ச்சிக்கு தேர்தல் கம்யூனிஸ்ட்டுகளும், சில சமூக ஜனநாயக அமைப்புகளும் கூட மேடை அமைத்துக்கொடுப்பது குறித்த கவலையைப் பதிவுசெய்கிறது இந்த நூல்.
”ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்கரீதியாக கம்யூனிசத்தின் கீழ் அணிதிரளுவதைத் தடுக்க ஏகாதிபத்தியங்கள் பவுண்டேசன்களையும், திருச்சபைகளையும், பின்நவீனத்துவ பின்புலம் கொண்ட தலித் இயக்கங்களையும் உருவாக்கின.1950 களின் துவக்கத்தில் இந்தியாவுக்கு வந்த ஃபோர்டு பவுண்டேசன் தலைவர் பால்ஹர்ப்மேன் “சீனாவை இழந்துவிட்டோம். இந்தியாவை இழக்க மாட்டோம்” என்று வெளிப்படையாக அறிவித்தார்.” இந்த வார்த்தைகளுக்கு பின்னே உள்ள அரசியலைப் புரிந்துகொள்ள அவ்வளவொன்றும் சிரமம் இருக்காது.
“ வன்னிய இளைஞர்களை நக்சலைட்டுகள் ஆகாமல் நாங்கள் தான் தடுத்தோம்” என்ற காடுவெட்டி குருவின் ஒப்புதல் வாக்குமூலமும், ராமதாசின் புகையிலை எதிர்ப்பு, மது ஒழிப்பு போன்ற ’ஆல் டைம்’ நாடகக் கம்பெனிகளுக்குப் பின்னே என்.ஜி.ஓக்களின் நிதி பெறுகிற அப்பட்டமான சுயநலமும் அம்மனமாக்கி இருக்கிறது இந்த நூல்.
ஒரு சிறந்த புத்தகம் என்பது அதை வாசித்து முடிக்கும்போது வாசகனுக்கு சிறிய அதிர்வையாவது ஏற்படுத்த வேண்டும். உண்மையில் உங்களுக்கும் இந்த நூல் அந்த அதிர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் தோழர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். தோழர் குணாவின் உழைப்பு நெகிழ வைக்கிறது. வாழ்த்துக்கள் தோழர்.
No comments:
Post a Comment