"அன்புள்ள அப்பா,நீங்கள் நலமாக இருப்பீர்கள் .எனக்கு இரண்டு வேளை சாப்பாடு எப்படியும் கிடைத்துவிடும் என்பதால் நான் நலமாக இருப்பேன் என்றுதான் நினைதுக்கொண்டிருப்பீர்கள்.ரொம்ப நலம் ,இரண்டு வேளை சாப்பாடு கொடுத்து விடுகிறான் என் எஜமானன் .ஆனால் ஒரு நாளைக்கு ஆறுவேளை அவனுடன் படுத்து எழவேண்டியிருக்கிறது .என் இடுப்பு எலும்புகள் ஒழுங்காக இருக்கின்றனவா? ,அல்லது நொறுங்கி தூளாகிவிட்டதா? என்று தெரியவில்லை .வலி நிரந்தரமாகி விட்டது..படுத்து எழ வேண்டியிருக்கிறது என்றுதான் சொன்னேனே தவிர, உறங்கினேன் என்று சொல்லவில்லை என்பதையும் கவனிக்கவும்.
என் எஜமானன் ஒரு மிருகம் ,அவனது மூர்கத்தனத்தை என்னால் விவரிக்கவே முடியாது ,விடிந்ததிலிருந்து நாலைந்து முறை உறவு கொள்ள அழைத்திருக்கிறோமே ,அந்த பதினேழு வயதுபெண்ணை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்வோம் என்று கனவிலும் நினைக்க மாட்டான் .காரியமானதும் உடனே என்னை வேலைக்கு விரட்டுவான் .அவனை திருப்தி செய்த கையேடு அவனது பண்ணை குதிரைகளுக்கும் சேவகம் செய்ய வேண்டும் .
ஆனால் அந்த குதிரைகளுக்கு என் மீது கொஞ்சம் இறக்கம் உண்டு .என் எஜமானன் எனக்குகொடுக்கும் உப்பு போட்ட ஒரு பிடி அரிசிப்பொரி எனக்கு போதாது என்று எப்படியோ அவை தெரிந்து வைத்திருக்கும் .அவற்றிற்கு வைக்கும் கொள்ளில் கொஞ்சம் எனக்காக மிச்சம் வைத்திருக்கும்,நான் அவற்றை தேய்த்து குளிப்பாட்டிய பிறகு பிடிபிடியாக அள்ளி சாப்பிடுவேன்.........."
இந்த கடிதம் 1756 அல்லது 1757 ஆம் வருடம் எலிசபத் ஸ்பிரிங் என்னும் விர்ஜீனிய அடிமை எழுதியது
(ஆதாரம் ;டாலர் தேசம் ,-பா.ராகவன் ,பக் ;100)
உலகிற்கெல்லாம் ஜனநாயகம் ,மனித உரிமைபற்றி வாய் கிழிய வகுப்பெடுக்கும் அமெரிக்கா ,அந்த மண்ணின்பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை நடத்திய முறைக்கு இது ஒரு உதாரணம் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
உண்மையில் இன்று அமெரிக்கர்கள் என்று நாம் கூறுபவர்கள் அந்த மண்ணின் பூர்வ குடிகளல்ல ,அவர்கள் வந்தேறிகள் .பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை லட்சக்கணக்கில் கொன்று அவர்களின் பூமியை ஆக்கிரமிப்பு செய்துகொன்ட குடியேறிகள்.
நமது தஞ்சையை ராஜராஜ சோழன் ஆண்ட பொழுதெல்லாம் அமெரிக்கா என்று ஒருதேசமே இல்லை .1492 இல் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கிறார் .அதன் பிறகு போர்த்து கீசியர்கள்,ஸ்பெயின்,இங்கிலாந்து நாடுகள் அந்த நிலப்பகுதிக்காக அடித்துக்கொண்டு தத்தமது காலனிகளாக சிறு சிறு பரப்புகளை ஆக்கிரமித்து கொள்கிறது.இதில் இங்கிலாந்தை அப்போது ஆண்ட முதலாம் ஜேம்ஸ் மன்னனின் நினைவாக அமெரிக்கா மண்ணில் ஜேம்ஸ்டவ்ன் என்ற
ஒரு சிறு நகரம் உருவாக்கப் பட்டது.அதை சுற்றிதான் விர்ஜீனிய குடியேற்ற பிரதேசம் உருவானது .இந்த பகுதியில் இங்கிலாந்து குடியேற்றம் வேகமாக நடைபெற்றது.எதிர்ப்புகாட்டிய செவ்விந்தியர்களின் வில்லும்,கல்லும்,.இங்கிலாந்தின் துப்பாக்கிகளுக்கும்,பீரங்கிகளுக்கும் முன்னால் கொடுமையான முறையில் முறியடிக்கப்பட்டது.(உண்மையில் அந்த காலகட்டத்தில் அவர்களின் ஆயுதங்கள் வில்லும்,ஈட்டியும்,சில கல் ஐயுதங்களும்தான்).ஏராளமான செவ்விந்தியர்களை கொன்று அழித்தது போக எஞ்சிய சிலரை தாங்கள் உருவாகிய புகையிலை தோட்டங்களுக்கு வேளை செய்ய அடிமைகளாக ஆக்கிக்கொண்டனர்,சில ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் அடிமைகளை இறக்குமதி செய்துகொண்டனர்.
பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய மக்கள் இங்கிலாந்தின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக
1765 இல் போராட ஆரம்பித்து கடைசியில் சிதறிக்கிடந்த துண்டு துண்டு காலணிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திர போராட்டமாக பரிணாமம் அடைகிறது .1783 இல் அமெரிக்கா சுதந்திர தேசமாக ,அமெரிக்கா ஐயக்கிய நாடுகளென்று தம்மை அறிவித்துக்கொண்டது.
அமெரிக்கா சுதந்திரம்பெற்று சுமார் இரண்டுநூற்றாண்டுகளில் அத்தேசம் இதுவரை சுமார் நூருபோர்களிலாவது பங்கெடுத்திருக்கிறது.போருக்கான செலவுகளை விட போருக்கு பிந்தைய ஆதாயங்களையே குறிவைத்து போர்களை நடத்துகிறது .அந்த தேசத்தின் மொத்த அரசியலையும் போர்கள்தான் தீர்மானிக்கிறது.உலகிலேயே இந்த தேசம் மட்டுமே போர்களை ஒரு வருமானம் தரும் தொழிலாக வைத்திருக்கிறது .நினைத்தால் நடுக்கம் தரக்கூடிய இந்த செயலை மிக நிதானமாக திட்டமிட்டு ,கவனமாக செய்து கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள் .
நமது இந்திய கார்கில்போரில் வெற்றிபெற்றது ,ஆனால் அந்த சிறிய போரே நம் பொருளாதாரத்தை எவ்வளவுதூரம்பாதிதது என்பதைநினைவு கூர்வோம், நம் தேசம்முழுதும்ஊருக்குஊர்,தெருவுக்குதெரு யுத்தநிவாரண நிதி நாம் துண்டேந்தி வசூல் செய்ததை ஒப்பிடும் போதுஇவ்வளவுபோர்களுக்கு பிறகும் அமெரிக்காவின் செல்வ செழிப்பிற்கும் ,பளபளப்பிர்க்கும்,என்ன காரணம்?யுத்தங்களின் முடிவில் அவர்கள் அடையும் ஆதாயமே .(உண்மையில் அமெரிக்காவின் செல்வ செழிப்பும் ஆடம்பரமும் ஒருகுறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு மட்டுமே செல்கிறது ,கடன்சுமையும்,வேலையில்லாத்திண்டாடமும் ,வறுமையும்,பட்டினியும்,அமெரிக்காவிலும் உண்டு, ஆனால் அது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.)
அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளும் ,வெளியுறவு கொள்கைகளும்,அப்பட்டமான மோசடிதனங்களும்,திருட்டுத்தனங்களும் ,சுயநலமும்,மட்டுமே கொண்டதுஎன்பது அதன் வரலாறு முழுதும் காணக்கிடைக்கும் உண்மைகளாகும்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள எண்ணெய்வளத்தை எடுக்காமல் தன்எதிர்கால தேவைகளுக்கு பதிரப்படுதிக்கொண்டு குவைத் ,ஈராக்,......இன்று லிபியா என எண்ணெய் வளமுள்ள நாடுகளின்மேல் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்து தன் எண்ணெய் திருட்டை கொஞ்சமும் உறுத்தல் இன்றி இன்றுவரையிலும் செய்துவருகிறது.
தனக்கு லாபமில்லாத எந்த தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதுமில்லை ,உள்ள விவகாரங்களில் தலையிடுவதுமில்லை ,போர் தொடுப்பதுமில்லை.ஆனால் உலகில் யுத்தம் நடந்துகொண்டே இருப்பதை எப்போதுமே ஊக்குவித்துக்கொண்டு இருக்கும் சண்டையிடும் இரு தேசங்களுக்குமே ஆயுதங்களை விற்று கொள்ளைலாபம் சம்பாதிக்கிறது.(உம ;இந்தியாவுக்கும் ஆயுதம் விற்கும்,பாகிஸ்தானுக்கும் ஆயுதம் விற்கும் ) நமது நாடு கூட சமீபத்தில் ஆயுத கொள்முதலில் முதலிடம் என்றுஊடகங்களில் செய்தி வெளியானதும் கொஞ்சம் எதிர்ப்புகள் வெளிவர துவங்கியதும் ,உலகக்கோப்பை போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி என்று நமது உளவுத்துறை செய்தி வெளியிட்டு ஆயுத கொள்முதல் அவசியமானதுதான் என்று எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்ததும்சென்ற வாரத்தில் ஊடகங்களில் பார்த்திருக்கலாம்..
.அமெரிக்கா பிற நாடுகளிடம் நிர்பந்திக்கும் விஷயங்கள் என்னவெனில்
1.அமெரிக்க பெருநிருவனங்களுக்கு கொள்ளைலாபம் கிடைக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது
2.தன் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு கூட்டாளியாக இருக்க செய்வது
3.ஐ நா சபையில் தனக்குஆதரவாக வாக்களிக்க செய்வது
4.அந்த நாடுகளில் தன் ராணுவ தளங்களை அமைக்க அனுமதிக்க செய்வது.
இன்று உலகில் 70 நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது
இந்த வகையில் பிற நாடுகளை தன்கைப்பிடியில் வைக்க அமெரிக்கா மேற்கொள்ளும் சூழ்சிகள்
,
1.பிற நாடுகளை உலகவங்கி,சர்வதேச நிதியம்,போன்ற அமைப்புகளமூலம் கடன் கொடுத்து அந்த கடன்தொகையில் அமெரிக்கா பெரு நிறுவனங்கள் பெரும்லாபம் ஈட்டுவதற்கான ஒப்பந்தங்களை பெறுவது .மேலும் அந்த நாட்டை பெரும் கடன்சுமையில் அழுத்தி தன்மீதான விசுவாசத்தை உறுதி செய்துகொள்வது (உம ;இந்தியா-இன்றுவரை )
2.இந்த வலையில் விழாத நாடுகளின் அதிபர்களுக்கு எதிராக உள்நாட்டில் ஏதாவது குழப்பத்தை ஏற்ப்படுத்தி ,
செயற்கையாக கலகத்தை உருவாக்கி ,கலகக்காரர்களுக்கு ஆயுதம் பணஉதவி போன்றவற்றை செய்து அந்த ஆட்சியை கவிழ்த்து தனக்கு சாதகமான ஒரு பொம்மை அதிபரை அமர்த்தி தனக்கு விசுவாசமாக இருக்கும்படி செய்வது (உம;ஈரான்-அதிபர் மொசாடேக்-1951)
3.பொருளாதார தடைகள் விதித்து அந்த நாட்டை தனிமைபடுத்தி தன் வழிக்குக்கொண்டுவர முயல்வது (கியூபா)
4.அதுவும் எடுபடாத போது தன்கொலை படையான
C.I.A.வை கொண்டு அந்த நாட்டின் தலைவரை கொலை செய்வது (உம ;ஈக்வடார் அதிபர் ரோல்டோஸ் -1981)
5.அதுவுமியலாத பட்சத்தில் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தை கூறி அந்த நாட்டின்மேல் யுத்தம் தொடுத்து அந்த அதிபரைமாற்றுவது (உம ;ஈராக் அதிபர் சதாம்-2003 )
அமெரிக்கா தன்னிச்சையாக உலக நாடுகளில் தலையிட்டு நிகழ்த்திய போர்களில் முக்கியமான சில ;
சீனா1945-46, கொரியா1950-53, கவ்தமாலா 1954, பிரான்ஸ்1947, இத்தாலி1947-70, கிரீஸ்1947-49, பிலிப்பின்ஸ் 1945-53, ஈரான்1953 , கோஸ்டா ரிகா1970-71 இந்தோனேஷியா1958, ஈராக்1958 -63, பிரேசில்1961-64, கிழக்கு ஜெர்மனி1950, லாவோஸ்1957-73, கியூபா1959-61, காங்கோ1964, பெரு1968, லாவோஸ்1967-73 , வியட்நாம் 1961-73, கம்போடியா1969-70, க்ரானடா1983, லெபனான்1983-84, லிபிய1986, எல் சல்வடார்1980, ஈரான்1987, பனாமா1989, ஈராக்1991, குவைத்1991, சோமாலியா1993, போஸ்னியா1994-95, சூடான்1998, ஆப்கானிஸ்தான்1998, யுகோஸ்லேவிய1999, , ஹென்டுராஸ்1980 , காங்கோ1977-78, சிலி1964-73, போர்சுகல்1974-76, கிழக்குதைமூர்1975-1999, பல்கேரியா1990-91, அல்பேனியா1949-53, டொமினிக் குடியரசு1964-65, உருகுவே1969-72, கானா1966, ஹைதி1959, அல்பேனியா1949-53, பொலிவியா1964-75, அங்கோலா1975-80, சூரி நாம்1982-84 , கொலம்பியா1990, மெக்ஸிகோ1990, பெரு1990, ஆப்கானிஸ்தான்2001, ஈராக்2003, லிபியா 2011 .
உலக நாடுகளின் போலீஸ் காரன் என்று சொல்லிக்கொள்ளும் பக்கா திருடனான அமெரிக்கா உலக நாடுகளில்தன்னிசையாக தலையிட்டு சண்டித்தனம் செய்கிறது ,உண்மையிலேயே அதற்க்கு மக்கள் நலனின் அக்கறை இருந்தால் இலங்கையில்நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு தன் வாய் திறக்காதது ஏன்?லிபியா மக்களின்பாதுகாப்பிர்க்கு என்று சொல்லிக்கொண்டு போர் தொடுத்த அமெரிக்காவின் கண்களுக்கு இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு முக்கியமாக படவில்லையே ஏன்?ஏனென்றால் லிபியாவில் எண்ணெய் இருக்கிறது ,இலங்கையில் என்ன இருக்கிறது?
சில இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கூறுவதுபோல் அமெரிக்கா இஸ்லாமுக்கோ அல்லது இஸ்லாமிய நாடுகளுக்கோ எதிரியல்ல ,அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஒட்டு மொத்த மனித இனத்துக்கே எதிரி ,அமெரிக்கா தன் எதிரியையோ அல்லது நண்பனையோ ,மதத்தைகொண்டோ,இனத்தைகொண்டோ, நிர்ணயிப்பதில்லை ,பணத்தைக்கொண்டும்,செல்வ வளங்களை கொண்டுமே நிர்ணயிக்கிறது .
உலகின் ஒரே ஏகபோக அதிபதியாக தன்னைநிலை நிறுத்திக்கொள்ள எந்த ஒரு கொலை பாதக செயலையும் அஞ்சாமல் செய்யும் .உலகின் செல்வமெல்லாம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சிக்குடிக்கும் தணியாத ஏகாதிபத்திய தாகத்தோடு அலைகிறது .வர்த்தகமும் லாபமும் மட்டுமே குறிக்கோள் எனக்கொண்டு உலகின் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலும்,பட்டினியிலும்,நோய்களிலும்,இரக்கமின்றி கொள்ளும் தனது தாராளமய,உலகமய சூழ்ச்சி வலையை உலகம் முழுதும் விரித்துவைத்து வைத்து காத்திருக்கிறது .
தனது நாட்டில் தானியங்கள் மிகை உற்பத்தி ஏற்ப்பட்டு விலைவீழ்ச்சி ஏற்ப்பட்ட பொழுது உலகின் பல பகுதிகளில் பஞ்சத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்த போது கூட அவர்களுக்கு கொடுக்க மனமின்றி கடலில் கொட்டி அளித்தது தானே இந்த ஏகதிபத்தியம் ,இன்று மக்கள் நலன் பற்றி நாடகம் ஆடுகிறது .
அமெரிக்காவின் இந்த தறிகெட்ட ஆட்டமானது பழைய ரோமானிய பேரரசின் அடாவடித் தனங்களையே நினைவு படுத்துகிறது.அந்த ரோமானிய பேரரசு வீழ்ந்ததுபோல் ,இந்த ஏகாதிபத்தியமும் முற்ப்போக்கு சக்திகளால் முறியடிக்கப்படும் காலம் தூரமில்லை,.இந்த ஏகாதிபத்திய சக்திகளின் முதுகெலும்பை உடைத்து உலகில் பாட்டாளிவர்க சர்வதிகாரம் நிலைபெறும் நாளும் தூரமில்லை....

No comments:
Post a Comment