''புத்தர் புன்னகைக்கிறார்''...
இது என்னவோ ஒரு அமைதி மாநாட்டின் பெயர் அல்ல இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நிகழ்த்திய முதல் அனுகுன்டு சோதனையின் பெயர் (பொக்ரான் 1974 may 18).
"நாடுகள் சம வலிமை பெறும்போதுதான் போருக்கான வாய்ப்புகள் குறையும் அப்போதுதான் என்னால் புன்னகைக்க முடியும் என்று புத்தர் கூறினார் ,இப்போது நாமும் அணு வல்லரசுகளின் வலிமைக்கு நிகராக வலிமை பெற்றுவிட்டோம் எனவே இந்த பெயர் சூட்டப்பட்டது "என்று இந்திரா கூறினார் .
(இலங்கையில் பௌத்தம் செய்த பாசிச படுகொலைகளை புத்தர் பார்த்திருந்தால் தற்கொலை பண்ணிக்கொண்டு செத்திருப்பார்).
"அணுவைக்கொண்டு அமைதி சமைப்போம் "...
இதை கூறியது ஏதோ அமைதியை விரும்பும் ஒரு நாட்டின் அதிபர் அல்ல
இரண்டாம் உலக போரில் ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி,என்ற இரு நகரங்களின் மேல் அணுகுண்டை வீசி இரண்டு இலச்சத்து பதினைந்தாயிரம் அப்பாவி மக்களை கொன்றழித்த கொலைகார அமரிக்க அதிபர் ஐசனோவர் ..
உண்மையில் அந்த அணுகுண்டுகளை வீசவேண்டிய அவசியமே இல்லை ஜப்பான் சரணடைய தயாராகத்தான் இருந்தது ,ஆனால் உலகில் முதன் முதலில் கண்டுபிடித்த இந்த பேரழிவு ஆயுதத்தை பரிசோதனை செய்யவே அமெரிக்கா அணுகுண்டை வீசியது,அதுவும் சேத விபரம் முழுமையாக தெரிந்து கொள்வதற்காக அதுவரை பாதிக்கப்படாத ,தாக்குதலுக்கு ஆளாகாத இரண்டு நகரங்களை தேர்ந்தெடுத்து அழித்தது, லட்சக்கணக்கான மக்களின் மரண குரல்களுக்கு நடுவே வெட்கமின்றி சிரித்தது அமெரிக்க ஏகதிபத்தியம்.(1945 aug 6,9) .இந்த விவரமெல்லாம் இரண்டாம் உலகப்போர் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் ,சரி நாம மேட்டருக்கு வருவோம்.
அணு ,அனுசக்தினு சொல்லுறாங்களே அப்படின்னா என்ன?
அணுவின் மையதில் கருவாக புரோட்டானும்,நியுட்ரானும் இருக்கும்,எலக்ட்ரான் அதை சுற்றி வரும்,புரோட்டானில் இருந்து மொசான் எனும் துகள் பிரியும் போது நியுட்ரான் உருவாகிறது.மொசானும் நியுட்ரானும் சேர்ந்து புரோட்டான் உருவாகிறது.கருவை சுற்றிவரும் எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரானின் நிறைக்கு சமமான ஆனால் நேர் மின்னூட்டம் கொண்ட பாசிட்ரானும் இருக்கிறது என்றெல்லாம் அணு விஞ்ஞானதுக்குள் சென்று உங்களை குழப்ப விரும்பவில்லை.
எளிமையாக சொல்லவேண்டுமென்றால் ஒரு பொருளை தொடர்ந்து உடைத்துக்கொண்டே சென்றால் இறுதியில் கிடைக்கும் கண்ணுக்கு புலப்படாத ஒரு துகளே அணுவாகும்.ஒரு குண்டூசியின் முனையில் மட்டும் 25 லட்சம் அணுக்கள் உள்ளது என்பதை வைத்து அணுவில் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த அணுவையும் உடைக்க முடியும், அப்படி உடைக்கும் போது ஏற்ப்படும் நிறை இழப்பால் சக்தி வெளிப்படுகிறது ,அந்த சக்தியானது மீண்டும் மீண்டும் அணுப்பிளவை துரிதப்படுத்துகிறது .இது ஒரு சங்கிலித்தொடர் போல நிகழ்கிறது அப்போது வெளிப்படும் பிரம்மாண்டமான சக்தியே அனுசக்தியாகும் .இதை பயன்படுத்தி மின்சாரமும் தயாரிக்கலாம்,அணுகுண்டும் தயாரிக்கலாம்.அதாவது நெருப்பை பயன்படுத்தி விளக்கும் ஏற்றலாம்,வீட்டையும் கொழுத்தலாம் என்பது போல.
சரி இப்போது நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் அணுவைக்கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் யாருக்காக ?-மக்களுக்காக, அணுகுண்டு தயாரிப்பது எதற்க்காக -அதுவும் மக்களின் பாதுகாப்பிற்காக(!)சரி ஜப்பான் மக்களுக்காக கட்டப்பட்ட அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்தால் அதே மக்கள் ஆபத்தை சந்திக்கிறார்களே ஏன் ?இது யார் தவறு?
கடல் மட்டத்திலிருந்து 70 கி மீ தொலைவில் தான் அணு உலைகளை அமைக்க வேண்டும்,8 மீட்டர் உயரதிர்ற்கு பாதுகாப்பு சுவர்கள் இருக்கவேண்டும் ,என்னும் விதிகளை மீறிய அதிகாரிகளின் தவறா?இல்லை அதற்கு அனுமதியளித்த அரசாங்கத்தின் தவறா?பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்த்து சான்றிதழ் கொடுத்த விஞ்ஞானிகளின் தவறா? ஆனால் ஒருவிசயம் என்னவெனில் தவறு யார் மீது இருந்தாலும் தண்டனை அனுபவித்து வருவது மக்கள் தான்.(நமது கூடங்குளம் அணுமின் நிலையம் கடற்க்கரையோரம் தான் அமைந்திருக்கிறது)
ஜப்பான் விபத்திற்கு பிறகு நமது விஞ்ஞானிகள் நமது அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்து ,நமது உலைகள் மூன்றாம் தலை முறை உலைகள் எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்ல முறையில் உள்ளது என்று இந்திய அணுசக்தி கழக தலைமை நிர்வாக இயக்குனர் s. k .ஜெயின் கூறியுள்ளார் .இந்த ஆய்வு சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட முழுமையான ஆய்வாக இருக்கவேண்டும என்பதே மனித நேயம் உள்ள எல்லோரின் எண்ணமாகும்.
அனுவிபத்து நிகழ்வது இது முதல் முறையல்ல,இதற்க்கு முன்பு பல விபத்துகளை உலகம் சந்தித்துக்கொண்டுதான் உள்ளது.1857 முதல் இன்று வரை சுமார் 4000 விபத்துக்கு மேல் நிகழ்ந்துள்ளது.
1957--யூரல் மலைத்தொடர் விபத்து ,1961--அமெரிக்க ,1969--சுவிஸ்,1974--ரஷ்யா,1975-89 மீண்டும் அமெரிக்கா(த்ரீ மைல்ஸ் ஐய்ச்லாந்து),1981 ஜப்பான்,1983-அர்ஜென்டினா ,1986-அமெரிக்கா ,,இது போல இன்றுவரை தொடர்கிறது .
"இதுபோன்ற ஆபத்தான அணு உலைகள் மனிதநேயம் அற்ற முறையில் உருவாக்கப்படுவதும்,பிற நாடுகளுக்கு விற்பதும் கூடாது "என்று முதல் அணு உலையை வடிவமைத்த விஞ்ஞானி டாக்டர் தேவில் லிலி கூறியுள்ளதை நினைவுகூர்வோம் .
அணு உலை கொண்டு மின்சாரம் தயாரிப்பதென்பது கச்சா முச்சாவென்று செலவு பிடிக்கக்கூடிய விஷயம்,ஆனாலும் நமது! அரசு கண்டிப்பாக அணு உலை வாங்கியே தீர்வது என்றும் அதுவும் கொலை வியாபாரிகலான அமெரிக்காவிடம் தான் வாங்குவேன் , என்று அடம் பிடித்ததையும் இது நமது இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எப்போதுமே தடையாக இருக்க கூடிய(!) இடதுசாரிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றதையும் ,அதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி(!)பெற்றதையும் நமக்கு தெரியும், இப்போது m.p களுக்கு பணம் கொடுத்துதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வென்றது என்கிற உண்மை விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் குட்டு வெளிப்பட்டு,கோழி திருடுன மாதிரி அரசு முழிக்கிறது வேறு கதை
சரி அந்த ஒப்பந்தம் பற்றி ஒரு சின்ன பார்வை பார்க்கலாமா?
ஒரு சின்ன கதை சொல்லட்டுமா? நீங்கள் ஒரு வீடு கட்ட நினைக்கிறீர்கள்,ungal ஊர் மேஸ்திரி வந்து உங்களிடம் பேசுகிறார்.சதுர அடிக்கு 1500 ரூபாய் கேட்கிறார் ,கட்டிடத்தின் தரத்திற்கும் முழு பொறுப்பேற்கிறேன் என்கிறார்,ஆனால் நீங்கள் பக்கத்துக்கு ஊரில் இருந்து கோட் சூட் போட்ட ஒரு மேஸ்திரியை கூப்பிட்டு பேசுகிறீர்கள் ,அவர் சதுர அடிக்கு 4000 ருபாய் கேட்கிறார்.சில நிபந்தனைகளை உங்களுக்கு போடுகிறார்,என்னவெனில் நாளைக்கு வீடு இடிந்து உங்கள் தலையில் விழுந்தாலும் அதற்க்கு அவர் பொறுப்பில்லை,.வீட்டை கட்டி முடித்த பிறகு நீங்கள் குடியேறிய பிறகும் கூட அவர் எப்போது வேண்டுமானாலும் உங்கள் படுக்கை அறை வரை வந்துகூட எட்டி பார்ப்பார் .காலம் முழுதும் அவர் செய்யும் எல்லா போக்கிரி வேலைகளுக்கும் ஆமாம் சாமி போடணும் . நீங்களும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் போடுகிறீர்கள் .
இந்த கதையோடு பொருத்தி அந்த ஒப்பந்தத்தை பார்ப்போம் ,அதாவது ரூபாய் 6 லத்சம் கோடி ருபாய் முதலீட்டில் நமக்கு 2020 இல் கிடைக்கக்கூடியதாக கணக்கிடப்பட்ட மின் அளவு இருபது ஆயிரம் மெகாவாட் .அதே நமது பாரம்பரிய முறைகளான அனல்,புனல்,காற்றாலை மூலம் இதே தொகையை முதலீடு செய்தால் நமக்கு 90 ஆயிரம் மெகாவாட் கிடைக்கும்,இந்த 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நமக்கு ஆகும் செலவு 1.3 லத்சம் கோடி மட்டுமே என்பது தெளிவு .அதற்க்கான நிபந்தனைகள், 1. அணுகுண்டு சோதனை செய்ய கூடாது ,2.இப்போது இருக்கும் அணு உலைகளை சிவில் ராணுவம் என பிரிக்க வேண்டும் (இதற்க்கு மட்டும் 4000 கோடி ரூபாய் செலவாகும்),3.நமது அணு உலைகளை அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யும் ,4.ஏதாவது விபத்து நேர்ந்தால் அதற்க்கு அமெரிக்கா பொறுப்பேற்காது (அவர்களின் அணு உலைகள் மேல் அவ்வளவு நம்ம்பிக்கை),5.அவசரமா வந்தா கூட கேக்காம பாத்ரூம் போகக்கூடாது ,என்பது போன்ற கையை முறுக்கும் நிபந்தனைகள் ,அதனையும் தாங்கிக்கொண்டு நமது அரசு வலிக்காத மாதிரியே நடித்து ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட்டது ,(ரொம்ப சந்தோஷம்)
1. நாட்டின் வளர்ச்சிக்கு என்று சொல்லப்படுகிற எந்த ஒரு திட்டமும் மக்களுக்கான திட்டமாக இருக்க வேண்டும்....
2. வினாடிக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈடும் 10 சதவிகித மக்களை மட்டும் கருதாமல் மீதம் 90 சதம் உள்ள ஏழை ,நடுத்தர மக்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்...
3, மக்களின் சமூக ,பொருளாதார,வாழ்க்கை பாதுகாப்பை கேள்விக்குறியாகி தீட்டப்படும் திட்டம் அறிக்கை அளவில் வெற்றிபெற்றாலும் உண்மையில் அது தோல்வியடைந்த திட்டமேயாகும் ,
4. இன்னும் சொல்லப்போனால் கமிசனுக்கும், லஞ்சத்துக்கும்,அடிமையாகி பேராசை காரணமாக போடப்படும் திட்டம் மூலம் மக்களுக்கு செய்யும் துரோகங்களை வரலாறு பதிவு செய்துகொண்டுதான் உள்ளது.
5 . மக்கள்விரோத கொள்கைகளுக்கும்,நடவடிக்கைகளுக்கும் மக்கள் மன்றம் தீர்ப்பு சொல்லும்...
No comments:
Post a Comment