இந்த தலைப்பில் விவாதிக்கும் போது கயிற்றின் மேல் நடக்கும் சாகசக்காரன் போல மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது,
என் கருத்துக்களின் மேல் விவாதம் செய்யும் என் முதல் விமர்சகியான என் அன்பு மனைவி முதல்,சக தோழர்கள் வரை என் கருத்துக்களுக்காக
(இந்த தலைப்பில் மட்டும்)ஆணாதிக்க சிந்தனை வாதி என்றும்,சனாதன பழமைவாத கோட்பாடு என்றும்,ஒரு படி மேலே சென்று தீவிர இந்துத்துவா வாதியின் கருத்துபோல உள்ளது என்றும் பல்வேறு விமர்சனக்கணைகளை சந்தித்திருக்கிறேன்.கடந்த வாரத்தில் நான் சந்தித்த ஒரு சம்பவமும் ,ஒரு இணையதள சகோதரியின் விண்ணப்பமும், என்னை மீண்டும் இந்த தலைப்பை தொடவேண்டி நிர்பந்திக்கிறது.
கடந்த வாரத்தில் என் நண்பரின் சகோதரி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து "அண்ணா hospital போகணும் என்னோட வண்டி பஞ்சர் ஆகிவிட்டது ,என்னை hospital கூட்டிபோக முடியுமா "என்று கேட்டார் .நானும் சரி என்று நான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவரை அழைத்துச்சென்றேன்.
அது ஒரு தோல் மருத்துவமனை, அங்கு சென்று மருத்துவரிடம் அவர் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் . ஆலோசனை முடிந்த பிறகு மருத்துவர் என்னை உள்ளே அழைத்து என்னிடம் கூறிய விஷயம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த பெண்ணிற்கு வாயில் நுழையாத ஏதோ ஒரு வியாதியின் பெயரை சொல்லி அந்த வியாதியின் ஆரம்பக்கட்டம் என்றும்,இது கிட்டத்தட்ட தோல் கேன்சரை போன்றது ,ஆரம்ப நிலையிலேயே வந்துவிட்டதால் குணப்படுத்தி விடலாம் பயப்பட தேவையில்லை என்றும் கூறினார்.ஆனால் கண்டிப்பாக இனிமேல் 'பொடாக்ஸ்' ஊசியை போட்டுக்கொள்ள கூடாது என்றும் எச்சரித்தார் .
வீட்டுக்கு சென்ற பிறகு அந்த பெண்ணிடம் போடாக்ஸ் ஊசியை பற்றி விசாரித்தபோது அவர் கூறியது என்னை முன்னை விட அதிர்ச்சியடைய செய்தது .
அதாவது இந்த ஊசி நோய் வந்த பிறகு போடும் ஊசியல்ல ,நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியுமல்ல,இது வியர்வை வராமல் தடுக்கும் ஊசி.அக்குள் பகுதியில் வியர்க்காமல் இருப்பதற்காக அந்த பகுதியில் இந்த ஊசி போடப்படுகிறது .மருத்துவத்தின் சாதனையை (!?)என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை
(அந்த சகோதரியிடம் அனுமதி பெற்றே இதை எழுதுகிறேன்)வியர்வை என்பது உடலின் நீர்ச்சமநிலைக்கு, வேப்பச்சமநிலைக்கு ,அதிகப்படியாக உள்ள உப்பு கழிவை வெளியேற்றுவதற்கு இயற்கை செய்த ஏற்பாடு, .இதை தடுப்பதற்காக ஊசி போட்டுக்கொண்டு அதன் மூலம் விளையும் பக்க விளைவுகளில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் படித்த(!?) இளைய தலைமுறை மக்களை என்னால் எந்த கணக்கிலும் வைக்க முடியவில்லை. இது மட்டுமல்ல இதுபோல எவ்வளவோ விசயங்களை மேற்கத்திய கலாசாரம் என்கிற பெயரில் வலிந்து ஏற்றுக்கொண்டு பின் விடுபட முடியாமல் அவதிப்படுகிறார்கள் .
மேற்கொண்டு போகுமம் முன் கலாசாரம்,நாகரிகம்,பண்பாடு போன்றவை பற்றி ஒரு சிறு குறிப்பை பார்ப்பது நமக்கு உதவும்.
நாகரிகமும் பண்பாடும் சேர்ந்ததுதான் கலாசாரம் .
நாகரிகம் என்பது வரலாற்று வழியில் மனிதன் அடைந்த ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டமும் நாகரிகம் என்று சொல்லப்படுகிறது .
அதாவது,அறிவியலும் அதோடு தொடர்புடைய கண்டுபிடிப்புகளும் மனிதன் பயன்படுத்த தொடங்கியதோடு தொடர்புடையது நாகரிகம்.
உதாரணமாக தாமிர நாகரிகம் ,இரும்பு நாகரிகம் .....என்கிற வரலாற்று வளர்ச்சியின் இப்போதைய நாம் இருக்கும் கட்டம் நவீன நாகரிகம்.
பண்பாடு என்பது குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வாழ தொடங்கியதிலிருந்து பிறக்கிறது. ஒரு குழுவாக வாழ்ந்த மனிதர்கள் இயற்கையுடன் நடத்திய போராட்டங்களின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை தன குழுவோடு பகிர்ந்துகொள்ள துவங்கியபோதுதான்
மொழி ,சடங்குகள்,பழக்கங்கள் ,உறவுகள் போன்ற பண்பாட்டின் கிளைகள் தோன்றுகின்றன . அதாவது தனியொரு மனிதன் தன குழுவிடமிருந்து உள்ள்வாங்கும் சமூக பாரம்பரியமே பண்பாடு எனப்படுகிறது .இன்னும் தெளிவாக சொன்னால் மனிதனின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்காக செய்துகொண்ட ஒரு ஏற்பாடே பண்பாடு .
எனவே நாகரிகம் என்பது ஒட்டுமொத்தமனித குலத்துக்கும் பொதுவானது ,பண்பாடு என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும்.
இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் இருப்பினும், உணவுப்பழக்கம்,உடை,மொழி,இனம்,மதம்,சடங்கு, சம்பிரதாயம் என்று எவ்வளவோ
மாறுபட்டிருந்தாலும்,ஒட்டு மொத இந்தியர்களுக்கான வாழ்வியல் வழிமுறையே இந்திய பண்பாடு.
உதாரணமாக,மக்களுக்கிடையே பல வேறுபட்ட திருமண முறைகள் இருந்தாலும்,இந்தியாவில் திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில்லை .
அதாவது விலங்குகளிடமிருந்து மனிதன் மாறுபட்டவன் என்பதைக்காட்டுவது பண்பாடு. விலங்குகள் குடும்பமாக வாழ்வதில்லை,தன்னுடைய துணையை
தன தேவைக்கேற்ப மாற்றிகொள்கின்றன. அதிலிருந்து மனிதன் மாறுபட்டு சமூகமாக,குடும்பமாக ,வாழ்கிற உயர்ந்த பண்பை பெற்றிருக்கிறான் .
இந்தவகையில் நமது இந்திய பண்பாடு விலங்குகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ,மேம்பட்ட பண்பாடாக இருப்பதில் நாம் பெருமை கொள்வோம்.
ஆனால் மேற்க்கத்திய நாடுகளில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதும்,தன தேவைக்கேற்ப தன துணையை மாற்றிக்கொள்வதும் நமக்கு விலங்குகளையே நினைவு படுத்துகிறது
(இனி பண்பாடு என்பதை கலாசாரம் என்றே குறிப்பிடுவோம்)
இனி கலாசாரத் தாக்கம் பற்றி பார்ப்போம்,அதாவது உணவுப்பழக்கம்,உடை,சமூகத்தோடு பழகும் பண்பு போன்றவை அந்தந்த மக்கள் வாழும் சூழ்நிலையும்,தட்பவெட்ப நிலையம்,சமூகத்தையும் பொருத்தது. நாம் வெப்பமண்டலத்தில் இருக்கிறோம் அதனால் மெல்லிய ஆடைகளை அணிகிறோம், இங்கு விளையக்கூடிய தானியங்களை உண்கிறோம்,நமது சமூகம் கற்றுத்தந்த வழியில் பயணிக்கிறோம்.
அதே போல் மேற்க்கத்திய நாடுகள் குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் குளிரை தாங்கும் கனமான ஆடைகளை அணிகிறார்கள். நாமும் அவர்களைபோலவே கனமான ஆடைகளை இந்த கொளுத்தும் வெய்யிலில் போட்டுக்கொண்டு அலைய நினைப்பது தான் மேற்கத்திய தாக்கம்.
உண்மையில் நாம் எதிர் கொண்டிருக்கும் பிரச்னை மேற்க்கத்திய தாக்கமா?அல்லது மேற்க்கத்திய திணிப்பா?
பிறர் வாழ்க்கை முறையை நாம் விரும்பி ஏற்ப்பது தாக்கம்,ஆனால் நாமே அறியாமல் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதே உண்மை .
இதை உணர்ந்து இந்த ஆபத்திலிருந்து நம்மை நாமே மீட்டெடுப்பதே நம் முன் இருக்கும் முக்கிய கடமை .
ஒரு காலத்தில் உலகம் முழுதும் ஒதுங்க இடமின்றி விரட்டப்பட்ட யூதர்கள் தமக்கென்று இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை அமைதுக்கொண்டதர்க்கு (குறுக்கு வழியிலேனும்) அவர்களது பாரம்பரிய மொழியான ஹுப்ரு மொழியை அழியும் தருவாயில் இருந்து மீட்டெடுத்து மறு கட்டுமானம் செய்தது, மிக முக்கிய பங்கு வகித்தது.இது இஸ்ரேல் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், இதை ஏன்சொல்கிறேன் என்றால் ஒரு சமூக மக்களின் இணைப்பு கண்ணிகளே கலாசாரம்,அதை அந்நிய மோகத்தில் துருப்பிடித்து அறுந்துபோக அனுமதிப்பது நமக்கு நாமே குழி வெட்டிக்கொள்வது போன்றது.
மேற்க்கத்திய நாடுகள் மெனக்கெட்டு நம் மீது அவர்களின் கலாசாரத்தை திணிக்க என்ன காரணம் :?இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை
இங்கு நாம் நம் கலாசாரத்தை பாதுகாத்து வைத்திருந்தோமென்றால் மேலை நாடுகளால் இங்கு வந்து ஒரு சோடா கூடவிற்றிருக்க முடியாது .
லாப வேட்கை மட்டுமே கொண்ட வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே நமது கலாசாரத்தை சிதைத்து அவர்களது வாழ்க்கை முறையை நம் மீது திட்டமிட்டு திணிக்கிறார்கள் .கொஞ்சம் விவரமாக பார்ப்போம்...
நமது பாரம்பரிய சத்தான உணவுகள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது பிஸ்ஸாவும் ,பர்கரும்,நூடுல்சும் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது.
ஒரு 10 வருடம் முன்புவரை கோலிசோடா இருந்தது ,கலர் என்றொரு பானம் இருந்தது,பொவண்டோ ,காளிமார்க்,பொடாரன் என்ற பானமேல்லாம் இன்று போன இடம் தெரியவில்லை.என்ன காரணம்.பெப்சி என்கிற பகாசுர பெரும் நிறுவனத்துடன் போட்டி போடா முடியாமல் நமது சுதேசி பானங்கள் மறைந்து விட்டன.
இன்று பெப்சிக்கு கோக் உடன் போட்டி ,7 up க்குsprite உடன் போட்டி ,maazaa க்கு slice உடன் போட்டி என்று நாம் நினைதுக்கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மை என்னவெனில் இவை அனைத்திற்கும் ஒரே முதலாளி என்பது தான் ,வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக் கூடாது என்று தான் தமக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டு நம்மையெல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.
அடுத்தது விவசாயம், இந்தியாவின் முதுகெலும்பு .அது நாளுக்கு நாள் ஏழை தொழிலாளியின் முதுகெலும்பு போல் வழிந்துகொண்டே போகிறது.
ஏற்கனவே நமது(!?)அரசு விவசாயத்திற்கான மானியங்களை படிப்படியாக வெட்டிக்கொண்டே வந்து லட்சக் கணக்கான விவசாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நிர்வாகம் செய்து விவசாயத்தை வளர்க்கிறது.(!?). போதாது என்று மான்சாண்டோ என்கிற பகாசுர நிறுவனத்திடம் pt பருத்தி, pt கத்தரி என்று விதைகளை வாங்கி இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு அடமானம் வைக்க திட்டமிட்டது .நமது பாரம்பரிய விவசாய முறையை காவு கொடுக்க முயற்சி செய்தது, மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக அந்த திட்டத்தை தள்ளிப்போட்டது .(note this point ;தற்காலிகமாக) அரசின் அந்த முயற்சி நிறைவேறியிருந்தால் நாம் இனிவரும் காலங்களில் விதைகளுக்காக அந்த நிறவனங்களை எதிர்பார்தே இருக்கும் நிலைக்கு தள்ளப்படிருப்போம்.ஏனெனில் அந்த விதைகளை விதைத்த நிலத்தில் வேறு எந்த விதையும் விளையாது .
அடுத்த முக்கியமான விஷயம் பெண்கள். மேற்க்கத்திய கலாசார வலையில் பெண்கள் தான் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.
முதல் இந்தியாவின் உலக அழகி dr ரீடா பரியா போவெல்(1966)
அடுத்தது ஐஸ்வர்யா(1994/ms.world),, சுஸ்மிதா(1944/ms.universe), டயானா ஹைடன்(1997/ms.wrld), யுக்தா முகி(1999/ms.wrld), பிரியங்கா சோப்ரா(2000/ms.wrld) லாரா தத்தா(200/ms.univ), தியா மிர்சா(2000/ms.asia) , நிகோல் பரியா (2010/ms.earth).
இந்த பட்டியல i பார்த்தல் என்ன தெரிகிறது ?1991 க்கு பிறகுதான் இந்தியாவில் அழகிகள் அதிகமாக் பிறந்திருக்கிறார்கள் ,அதற்கு முன்புவரை நம் நாட்டில் என்ன பெண்கள் யாரும் அழகாக பிறக்க வில்லையா ? அதுவல்ல காரணம் p.v. நரசிம்மராவ் தலைமையில் இந்தியா 1991 இல் உலக மய,தாராள மய ,கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு நம் பெண்களை அழகிப்பட்டம் கொடுப்பதன் மூலம் அழகு என்கிற குறுகிய மாயையில் மூழ்கடித்து மேற்க்கத்திய நாடுகள் தன அழகுசாதன பொருட்களை இந்தியாவில் அதிக அளவில் விற்று சந்தையை பிடித்துக் கொண்டது.
fair and lovely என்கிற க்ரீம் பல வருடங்களாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது,எழு நாட்களில் சிவப்பழகு என்ற விளம்பரம் செய்யப்படுகிறது .இதுவரை யாராவது அந்த க்ரீமை பயன்படுத்தி சிவப்பானதாக எங்கேனும் செய்தி உண்டா?இல்லை ஆனாலும் இன்று வரை அது தான் விற்பனையில் முதலிடம்.சிவாஜி படத்தில் வருவது போல கிலோ கணக்கில் பூசினாலும் கருப்பு சிவப்பாகாது,பழுப்பு வெளுப்பாகாது.
அடுத்து பெண்களின் உடையணியும் முறை , அடா, அடா ,அடா,நாகரிகம் என்ற பெயரில் சில பெண்கள் முகம் சுளிக்கும் வண்ணம் உடையணிந்து செய்யும் லூட்டியை சகிக்க முடிவதில்லை..ஆதிகால மனிதன் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலை,தழை களைக்கொண்டு தன உடலில் முக்கிய பாகங்களை மட்டும் மறைத்துக்கொண்டான்,நாகரிகம் வளர வளர தன சுற்றுச் சூழலுக்கேற்ப முழு உடலையும் மறைக்கும் படி உடையனிய துவங்கினான் .அதன் தொடர்ச்சிதான் நாம். மீண்டும் ஆதிகாலத்தை நோக்கிய சிலரின் பயணம் மிகப்பலரை முகம் சுளிக்க வைக்கிறது என்பதே உண்மை.
மேற்க்கத்திய நாடுகளில் ஆபாசமாக உடையணிகிறார்கள் என்றால் அது அவர்களின் சமூக பழக்கம்,முன்பே சொன்னது போல அது பண்படாத பண்பாடு ,விலங்குகளை ஒத்தபண்பாடு,ஆனால் நமது பண்பாடு முற்றிலும் மாறுபட்டது ,மேம்பட்டது.இதை உணர பழக வேண்டும்.
இப்படி எழுதுவது தவறு, அது பெண் உரிமை,பெண் சுதந்திரம் என்று வாய் கிழிய பேசும் பலரும் தன வீட்டுப்பெண்களை இப்படி உடையனிய அனுமதிக்க மாட்டார்கள் ,அல்லது உள்ளுக்குள் வருந்துவார்கள்.இது போன்று ஊருக்கு உபதேசம் செய்யும் இரட்டை வேட மனிதர்களை நாம் நிறைய சந்தித்திருக்கிறோம். ஆபாசமாக உடையணிவது எந்த வகையில் சுதந்திரம் என்பது புரியவில்லை.
பெண்ணடிமைதனத்தை நான் நிச்சயம் ஆதரிக்கவில்லை,அது சமுதாயத்தில் நிச்சயம் கழுவப்பட வேண்டிய அழுக்குதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .ஆனால் உடலின் அழுக்கை போக்க சோப்பு போட்டுதான் குளிக்க வேண்டும் ,அதற்க்கு டிடர்ஜெண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்பதே என் வாதம்.
1.சோப்புக்கும் டிடேர்ஜெண்டுகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர பழகுங்கள்.
2.சமூகத்தின் அழுக்கை போக்குகிறோம் என்ற பெயரில் சமூகத்தை சீரழிப்பது குறித்து கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்
3.மேற்கத்திய கலாசார திணிப்புகள் அனைத்தும் வெறும் வியாபார உத்திகள் தான் என்பது குறித்து எச்சரிக்கை கொள்ளுங்கள்
4.வரட்டுத்தனமான பிடிவாதத்தை விட்டுவிட்டு இந்த பிரச்சனையை ஒரு மூன்றாவது கோணத்தில் அணுகுங்கள்
5.முகத்திரை முறையை எதிர்பதென்பது எந்த வகையிலும் ஆபாசமாக உடையணிவதை ஆதரிப்பது என்று அர்த்தமாகி விடாது....
No comments:
Post a Comment