Tuesday, 26 April 2016

உங்கள் பிணங்களின் மேல் பாட்டாளி வர்க்கக்கொடி பறக்கும்... (01.11.2014)



ஈழ மக்களின் பிணங்களையும்
தமிழக மீனவனின் பிணங்களையும்
முத்துக்குமரன், செங்கொடியின் பிணங்களையும்
தின்று செரித்து வயிறு புடைத்த
பேரண்பு கொண்ட பிழைப்புவாதிகளே…

உழைக்கும் மீனவர்கள் ஐவருக்கு மரணமாம்
இலங்கைக் காட்டேரி தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

தாடிக்குள் புகுந்துகொண்ட மௌனியானாலும் சரி
ஐம்பத்தாறு அங்குல அலப்பறையானாலும் சரி
இந்தி தேசியக் காட்டேரிகள் எங்களை
எப்போதும் மனிதர்களாகவே பார்த்ததில்லை.

என்பத்து நாண்கிலும்,
இரண்டாயிரத்து இரண்டிலும்
தின்ற பிணங்களின் எச்சங்களை - அவர்கள்
பல்லிடுக்கில் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள்,
அந்தப் பிசாசுகளை நாங்களும் நம்புவதில்லை.

குடிசை கொளுத்தவே கட்சி நடத்தும் சாதிக்கட்சிகளையோ
இஸ்லாமியனுக்கு மட்டும் குரல் கொடுக்கும் வீதிக்கட்சிகளையோ
மங்குனி பதினேழு, தமிழ்தேசிய இசைகேடு போன்ற
சில்லரைப் பொறுக்கிகளையோ கேட்கவில்லை…

கட்சிப்பெயரில் திராவிடத்தை தாங்கி நிற்கும்
கணம் பொருந்திய கொலைகாரர்களே
உங்களைத்தான் கேட்கிறோம்.

மணிக்கணக்கில் உண்ணாவிரதமிருந்தோ
சட்டசபையில் தீர்மானங்கள் போட்டோ
முஷ்டியை உயர்த்தி மேடைகளில் முழங்கியோ
கருப்புத்துண்டு குலுங்க, கட்டைமீசை துடிக்க
மூச்சிறைக்க உலக வரலாறு பேசியோ

அதிரடி நாடகங்கள் நடத்தி
தயவு செய்து நேரத்தை வீனடிக்காதீர்கள்.

எங்களை மொத்தமாக இலங்கைக்கு விற்றுவிடுங்கள்
இல்லை தற்கொலை செய்துகொண்டு செத்துவிடுங்கள்

ஒன்றை நினைவில் வையுங்கள் – நீங்கள்
வெடிகுண்டின் மீதமர்ந்து நக்கிப் பிழைக்கிறீர்கள்.

நாங்கள் வர்கமாக ஓர்நாள் ஒன்று சேர்வோம் – அன்று
குண்டி வெடித்து நீங்கள் சிதறிப்போவீர்கள்,

உங்கள் பிணங்களின்மேல் பாட்டாளி வர்க்கக்கொடி பறக்கும்.

No comments:

Post a Comment