வழக்கமாக நாங்கள் கிரிக்கெட் வலைப்பயிற்சியில் ஈடுபடும் அந்த காம்பவுண்டுக்குள் இருவாரங்களாக பழைய டையிங் மெசின்கள் சில இருப்பதைப் பார்க்க முடிந்தது.
நேற்று காலையில் வழக்கம் போல பயிற்சிக்கு செல்கையில் ,ஓடாத பழைய மெசின்களை வெளி மாநிலங்களில் வாங்கி அதை பழுதுபார்த்து ஓடும் நிலைக்கு சரி செய்து உள்ளூரில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருபவரும், அந்த பழைய மெசின்களின் உரிமையாளருமான ஒருவரை சந்திக்க நேர்ந்தது.அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வழக்கமான வியாபார ரீதியான விசாரிப்புகளுக்கு நடுவே அந்த மெசின்களைப் பற்றிய பேச்சில் அவை அகமதாபாத்தில் இருந்து வாங்கியதாக கூறினார்.
நமது பாரதப் பிரதமர் ( அட...!! இன்னும் தேர்தலே வரலையா?) மன்னிக்கவும், வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சியின் பிரதமர் வேட்பாளர் , நாட்டுக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்து வரும் கட்டை பிரமச்சாரி(?!) நமோ சாஹேப் ( சஸ்பென்ஸ் மனைவி 'ஐசோதா பென்' நினைவுக்கு வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல) அவர்களின் முன்மாதிரி மாநிலமல்லவா ? இளம்பெண்ணை உளவுபார்த்த 'வைப்ரன்ட்' தலைவரின் மாநிலமல்லவா? அது குறித்து தெரிந்துகொள்ள விசாரித்தேன்
அவரது வார்த்தைகளில்....
" இந்த மெசினை வாங்கியது அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதி. அங்கு முஸ்லிம்களின் நிலைமை கிட்டத்தட்ட அகதிகளின் நிலைக்கும் கீழே தான் இருக்கிறது .ஒரு நல்ல உடை அணிந்த முஸ்லிம் ஆணையோ நல்ல புர்கா அணிந்த முஸ்லிம் பெண்ணையோ நீங்கள் அங்கு பார்க்க முடியாது ....
முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்கள் சேரிக்களை விட மோசமான நிலையில் சுகாதாரக்கேடு மலிந்து கிடக்கிறது.சாக்கடை தெருவில் ஓடுகிறது,சாக்கடையில் கால் வைக்காமல் நீங்கள் அந்த பகுதியைக் கடக்கவேண்டுமெனில் உங்களுக்கு சர்க்கஸ் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும் .சாக்கடையில் நனையாத கால்களுடனும், சாக்கடை நீர் தெறிக்காத ஆடைகளுடனும் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைய முடியாது....
பள்ளிவாசல்களில் அச்ச உணர்வோடுதான் தொழவேண்டி உள்ளது. தொழும் உரிமையும் நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது பர்ல் தொழுகை முடித்து சுன்னத்து தொழுகையை முழுமையாக முடிக்கக்கூட அவகாசம் தராமல் பள்ளிவாசல் நிர்வாகி நம்மை விரட்டுகிறார்.அவசர அவசரமாக அனைவரையும் வெளியேற்றி பள்ளிவாசல் பூட்டப்படுகிறது.அது அவரது தவறல்ல, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக யாரும் பள்ளியியில் இருந்தால் கிடைத்திருக்கிற இந்த தொழும் வாய்ப்பும் பறிக்கப்படலாம் என்கிற பதட்டமே அவரது கண்டிப்புக்கு காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது...
இந்த மெசின்களை நான் வாங்கியது ஒரு முஸ்லிம் வியாபாரியிடம். இந்த மெசினை கழற்றுவதற்கு ஆறு பேர் செய்யக்கூடிய வேலையை பதினொரு பேர் செய்கிறார்கள்.அந்த வியாபாரி அவருக்கு நான் கொடுத்த பணத்தில் அவரது முதலீட்டுக்கு தக்கவாறு சிறு இலாபம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதமிருப்பதை என் கண்ணெதிரேயே வேலை செய்த அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார்.விசாரித்தபோது அவர் மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அப்படித்தான் என்பதை அறிந்தேன்.அதற்கு அவர் கூறிய காரணம் என்னை கண்கலங்க செய்தது. அவரது வார்த்தையில் கூறினால் " 2002 இனப்படுகொலைகளுக்கு முன்னாள் இவர்களும் நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் தான்.அந்த அழித்தொழிப்பில் இவர்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டார்களே தவிர உடைமைகளையும் சொத்துக்களையும் காப்பாற்ற முடியவில்லை.முஸ்லிம்களின் வீடுகளும் தொழில் நிறுவனங்களும் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தேடித்தேடி அழிக்கப்பட்டபோது இவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு பஞ்சப் பராரி நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது வரை இவர்கள் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து கிடைக்கும் அற்ப கூலியில் காலம் தள்ளுகிறார்கள்.இப்போது நீங்கள் பார்த்தீர்கள் இரண்டு நாட்களாக இங்கு வேலை செய்தார்கள்.இவர்களுக்கு இனி எப்போது எங்கு வேலை கிடைக்கும் என்கிற நிச்சயமில்லை. இந்த பணத்தைக்கொண்டு இரண்டொரு நாளைக்காவது அவர்களது குழந்தைகள் பட்டினியின்றி இருக்கும் என்கிற 'ஈமான்' தான்" என்றார்.
மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினர் நல நிதியிலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட பெறாத பெரிய மனம் படைத்த 'வைபிரன்ட்' நாயகனை குஜராத் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டதாக ஊடக விபச்சாரிகள் தொடர்ந்து ஊதும் கோயபல்ஸ் பிரச்சாரத்துக்கு விளக்குப் பிடிக்கும் வேலையைச் செய்த அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக(?!) அரசியல் விபச்சாரிகளின் ஈமானுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.
No comments:
Post a Comment